சிறிலங்காவில் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!

344 0

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும்போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.