தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்பு!

521 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் செந்துாரன் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

தொண்டமனாறு -மயிலியதனை மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று இரவு அனாதரவாக கிடந்த அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் மீட்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து பொலிஸார், மற்றும் உறவினர்கள், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் தீவிர தேடுதலில் இறங்கியிருந்தனர்.

ஆனாலும் அவர் மீட்கப்படாத நிலையில் இன்று அதிகாலை தொண்டமனாறு கடற்கரையில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்</