தடைகள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற வெற்றிக்கு பின்னர் 100 நாள் வேலைத்திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த சவாலை வெற்றி கொள்வதற்காக தனது கட்சித் தலைமைப் பதவி உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறித்த 100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கட்சியின் நம்பகமான அணியொன்று தன்னை சுற்றியிருந்தது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதன்போது தான் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டேன்.
எனவே, தடைகள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடம் எப்போதுமே இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.