யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்படுவதாக வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்தே இந்த போராட்டம் கைவிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நாளை முதல் தமது பணி வழமை போல் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக கடந்த சில தினங்களாக யாழ்ப்பாண நகரில் குப்பைகள் தேங்கி, பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக நேர்ந்தமை குறிப்பிடதக்கது.