புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதற்கமைய அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவர்களின் இந்த கோரிக்கைக்கு அமைய ஊர்காவற்துறை நீதவான் இன்று அதற்கான அனுமதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு, மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.