சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வழிகாட்டலில் சமுர்த்தி பெறுவதற்கு காத்திருக்கும் பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாத உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சமுர்த்தி திணைக்களத்தினால் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் கிராம சேவகர் பிரிவுவிலுள்ள சமுர்த்தி பெறுவதற்கு காத்திருக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாத நிதி உதவி மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா வைரஸ் காரணமாக் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், சமுர்த்தி உதவி பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் இதுவரை எவ்விதமான கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரூபாய் பணமும், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.