இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு 02 பிரதேச முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு மேற்படி உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டமானது அவரின் பிரத்தியேகச் செயலாளரான தாமோதரம்பிள்ளை தங்கவேல் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.