இரண்டு தலை பாம்பை விற்க முயற்சி- பெங்களூருவில் 2 பேர் கைது

371 0

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு தலை பாம்பை விற்க முயன்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு தலை பாம்பை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆன்லைன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்வதாக கூறிக்கொண்டு 2 நபர்கள் அந்த பாம்பை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதுபற்றி ககாலிபுரா சரக வனத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை பறிமுதல் செய்ததுடன், அதனை விற்க முயன்ற 2 நபர்களை கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தலை பாம்பு மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதை வாங்கி வைத்தால் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.