வெளிநாட்டு இராணுவத்தின் உதவி தேவையில்லை என்கிறார் கமால் குணரத்ன!

332 0

கொரோனாவை வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடுவதற்கு வெளிநாட்டு இராணுவத்தின் உதவி தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தைப் பற்றி இந்தியாவுடன் பேசவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

கொரோனா நடவடிக்கைக்கு உதவ இந்திய இராணுவம் இலங்கை வருகிறது என்று இந்திய ஊடகங்கள் போலி செய்தி வெளியிட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.