பாகிஸ்தானில் இதுவரை 8,418 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 9 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேரில் 50 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பாகிஸ்தானில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நேற்று முன்தினம் வரை 8,418 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 9 ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 200-ஐ கடந்தது. பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேரில் 50 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தனது அரசாங்கம் முழுமையாக அறிந்திருப்பதாகவும், மாகாண அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.