மறுசீரமைப்புக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக நிலைமாறு நீதி வழங்கலுக்கு முக்கிய இடம்கொடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மறுசீரமைப்பு என்பது புள்ளடியிட்டுச் செல்லும் ஒரு பெட்டியோ அல்லது குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவு காணும் ஒரு பயணமோ கிடையாது.
இதனை அடைவதற்கு மிக நீண்ட காலம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.