அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பெரும் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் போதிய தங்குமிட வசதிகூட இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்காக இந்து அமைப்புகள் பிரத்யேக ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளன.
கரோனா தொற்று சூழல் மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்து யுவ, பாரதிய, விவேகானந்தா ஹவுஸ், சேவா இண்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள நெட்வொர்க் ஹெலப்லைன் எண் 802-750-YUVA (9882) ஆகும்.
90 மாணவர் தன்னார்வலர்கள் இணைந்து தங்குமிடம், அத்தியாவசியப் பொருட்கள் இல்லாததால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ள இந்திய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்த ஹெல்ப்லைனை நடத்தி வருவதாக வாஷிங்டனைச் சேர்ந்த அமைப்பாளர்களில் ஒருவரான பிரேம் ரங்வாணி தெரிவித்துள்ளார்.