ரேஷன் கார்டு தேவையில்லை: ஒருவரே எத்தனை முறையும் வாங்கிக் கொள்ளலாம்- ரூ.500-க்கு 19 வகையான மளிகைப்பொருட்கள் தொகுப்பு- மதுரையில் தொடங்கி வைப்பு

649 0

ரேஷன்கடைகளில் ரூ.500-க்கு 19 வகையான மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் முடங்கி உள்ள பொதுமக்களுக்கு 19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு ரேஷன்கடையில் கடையில் விற்பனை செய்யும் திட்டத்தை இன்று மதுரை பொன்மேனி ரேஷன்கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள 29,486 ஆயிரம் ரேஷன் கடைகள் மற்றும் பகுதிநேர கடைகளிலும், கூட்டுறவு சங்கம் தொடர்பான கடைகளிலும் இந்த 19 வகையான மளிகைப்பொருட்கள் தொகுப்பு விற்பனை தொடங்கபட்டுள்ளது.

தமிழக முழுவதும் உள்ள கடைகளில் விற்பனை செய்ய 10 லட்சம் சிறப்பு மளிகை தொகுப்புக்கள் தயார் நிலையில் உள்ளன. 597 மதிப்புள்ள பொருள்கள் 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை வாசியைக் கட்டுபடுத்தும் வகையில் தான் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து லாப நோக்கம் இல்லாமல் விற்பனை செய்யபடுகிறது.

இந்த தொகுப்பை வாங்குவதான் முலம் பொதுமக்களுக்கு 20 சதவீதம் லாபம் தான்.

சிறப்பு தொகுப்பு பெற ரேஷன்கார்டு அவசியம் இல்லை. அனைவருக்கும் இந்த தொகுப்பு விற்பனை செய்யப்படும். யார் வேண்டுமனாலும் இதனை வாங்கி க்கொள்ளாலாம். ஒருவர் எத்தனை தொகுப்பு வேண்டுமனாலும் வாங்கிகொள்ளலாம்.

இந்த திட்டத்தால் பதுக்கிவைக்க வாய்ப்பில்லை. வெளிச்சந்தையில் விலை கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நியாயவிலைக்கடைகளில் ரூ.500-க்கு அளிக்கப்படும் பொருட்களின் அளவு;

உளுந்தம் பருப்பு – 1/2 கிலோ

துவரம் பருப்பு – 1/2 கிலோ

கடலைப்பருப்பு – 1/4 கிலோ

மிளகு -100 கிராம்

சீரகம் -100 கிராம்

கடுகு -100 கிராம்

வெந்தயம் -100 கிராம்

தோசை புளி -250 கிராம்

பொட்டுக்கடலை -250 கிராம்

நீட்டு மிளகாய் -150 கிராம்

தனியாத்தூள் -200 கிராம்

மஞ்சள் தூள் -100 கிராம்

டீ தூள் -100 கிராம்

உப்பு -1 கிலோ

பூண்டு -250 கிராம்

கோல்டுவின்னர் எண்ணெய் -200 மில்லி

பட்டை -10 கிராம்

சோம்பு -50 கிராம்

மிளகாய் தூள் -100 கிராம்