அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினும், ரஷ்ய – அமெரிக்க ராஜதந்திர உறவை புதுப்பிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவருக்கும் இடையில் நேற்று முக்கிய தொலைபேசி வழி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக சிரியா விடயத்தில் இரண்டு தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன.
எனினும் ட்ரம்பின் பதவி காலத்தில் இந்த முரண்பாடுகள் தணிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.