சுவிஸ்குமார் தப்பிய சம்பவத்தின் பின்னணியில் தமிழ்மாறன், லலித் ஏ.ஜெயசிங்க

338 0

M

புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்குமார் கொழும்பிற்கு தப்பிச் சென்றமை தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகளை நடத்துவதற்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வித்தியா கொலையின் பின்னர் 9 ஆவது சந்தேக நபராக புங்குடுதீவில் வைத்து வைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
அங்க வந்த அவர் தப்பித்து வெளிநாட்டிற்கு செல்வதற்காக கொழும்பிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் கொழும்பில் வைத்து, அவர் மீண்டும் கைது செய்யபபட்டிருந்தார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றார் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடைபெற்றது.
இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் 21 கேள்விகளை எழுப்பி, அது தொடர்பான பதில்களை குற்றப் ;புலனாய்வு பிரிவினர் மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி குறித்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவ்விசாரணையின் போது சுவிஸ் குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவியவர்களாக கூறப்படும், அப்போது வடமாகா பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த லலில் ஏ.ஜெயசிங்க, சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ்மாறன் மற்றும் சுவிஸ்குமார் ஆகியோருடைய பெயரில் இலங்கையில் உள்ள 16 வங்கிகளில் பணம் பறிமாற்றப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான தகவல்களை அறிவதற்கான அனுமதியினை நீதவான் வழங்கியுள்ளார்.
மேலும் சுவிஸ்குமாரை தனிமைப்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டார்.