சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாவட்டங்களில் தபால் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தபால் விநியோகத்தில் தாமதம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், விமானம் மற்றும் கப்பல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கான தபால்கள் மறு அறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.