ஆவாக் குழுவினர் கைதில் முறைத் தவறலா?

322 0

human-rights-commissionஆவாக் குழுவுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தில் 11 இளைஞர்கள் கைதான விவகாரம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளை விசாரணை நடத்தவுள்ளது.

அதன் கண்காணிப்பு அதிகாரி தங்கவேல் கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதான 11 பேரில் 3 இளைஞர்களது குடும்பத்தார், அவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம் ஆவாக் குழு என்பது குற்றவியல் குழு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த இளைஞர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டியதில்லை.

எனவே இந்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.