சிறிலங்காவில் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா – சட்டமா அதிபர் திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டது!

349 0

சிறிலங்காவில் ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இது குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, அதில் அனைத்து அதிகாரிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை வளாகத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ளார்.

அத்தோடு திணைக்களத்தின் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அரச சட்டவாதிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தற்போது நிலைமை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸார் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கும் தங்களுக்கும் முழு ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்துவதற்கும், எதிர்வரும் நாட்களில் நிலைமையை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.