மதஸ்தலங்களுக்கு சென்றாலும் வரி – ஜே வி பி

303 0

sunil-handunnetti500001அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் கோவில், பள்ளி மற்றும் விகாரைகளுக்கு செல்லும் பொது மக்களிடம் இருந்தும் வரி அறவீட்டை மேற்கொள்ளும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் பொது மக்கள் மீது பாரிய வரிவிதிப்பை மேற்கொண்டுள்ளது.

இது பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது திணிக்கும் செயலாகும்.

இதன்படி வருங்காலத்தில் மதஸ்தலங்களுக்கு செல்கின்ற மக்களிடமும் வரி அறவிடப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.