அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கிடைக்கும் என்று நம்ப வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கும் என்று கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி தீர்வு கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கை அவசியம்.
தற்போது தீர்வு கிடைப்பதற்கான சிறந்த சூழ்நிலையும் சந்தர்ப்பமும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனை பயன்படுத்தி தீர்வைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் அமர்ந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெரும்பான்மைத் தலைவர்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டி, தமிழ் மக்களுக்கு தேவையான தீர்வுகளை பெற்றுக் கொள்ள வழி செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.