மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை தமிழக மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் கடமையை போர்கால அடிப்படையில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள், ஊடகத்தினருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்த மருத்துவ குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும் என முதலமைச்சர் கூறிய நிலையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. மருத்துவரின் உயிரிழப்பு என்பது அரசு அவசரமாக செயல்பட வேண்டிய அவசியத்தை காட்டுகிறது.
விரைவு பரிசோதனைக் கருவிகள் மூலம் கொரோனா தொற்றின் அளவை மதிப்பிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்றிலிருந்து மக்களை காக்கும் வகையில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
மேலும் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளின் படி, மக்கள் தனித்திருந்து தற்கொத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.