இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்கும் விடயத்தில் சிக்கல் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நிருவகிக்கப்படும் பப்புவா நியுகினி மற்றும் நவுறு தீவுகளின் அகதி முகாம்களில் உள்ள நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று அவுஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளது.
இந்த உடன்படிக்கை ஒபாமா நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இதனை முன்னெடுப்பாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் இந்த திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்று ஜோன் கெரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.