சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 31 நாட்களுக்குள் 33 ஆயிரத்து 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8,652 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடியமை, அத்தியாவசியசேவை எனக்கூறி போலியாக செயற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பாகவே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் உட்பட 20 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 05 மணிக்கு நீக்கப்பட்டதுடன் மீண்டும் இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.