சிறிலங்காவில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

341 0

சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை சிறுவர் சித்திரவதைக்குள்ளான சம்பவங்களுடன் தொடர்புபட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 377 முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவற்றில் 163 முறைப்பாடுகள் சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைத்துள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உளநல ஆலோசனை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

UNICEF உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.