ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எந்த சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது ? சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாது தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் இவ்வாறான தீர்மானிம் எடுக்கப்பட்டுள்ளமையை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்தோடு எவ்வித அடிப்படையுமின்றி மறு அறிவித்தல் வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது.
தேசிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கயைம மறு அறிவித்தல் வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தான் கொரோனா வைரஸ் பரவும் என்று இலங்கைக்கு எந்த சுகாதார அமைப்பு கூறியது என்று கேட்ட விரும்புகின்றோம்.
காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நேரத்தில் வாகனப் போக்குவரத்து மிகக் குறைந்தளவிலேயே காணப்படும். அத்தோடு மக்கள் நடமாட்டமும் இருக்காது. எனவே எந்த அடிப்படையில் இவ்வாறு ஊரடங்கினை அமுல்படுத்துவதற்கும் நீக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது .
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய காரணியான சமூக இடைவெளி முற்றாகக் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது என்பதே எமது கேள்வியாகும். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது இ அதனால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது மற்றும் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்ற மூன்று பிரதான பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் தனித்தனியாகவே தீர்வு காணப்பட வேண்டும். மாறாக மூன்று பிரச்சினைகளுக்கும் ஒருசேர எந்த நாடும் தீர்வு காண்பதில் வெற்றியடையவில்லை. இம் மூன்றில் எந்த பிரச்சினை முதன்மையானது?
முதலாவது பிரச்சினையான பொருளாதாரத்தைக் மீளக்கட்டியெழுப்புவதை எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படும். எனவே அதனை விடுத்து தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி முதலில் சிந்தித்தால் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வீழ்ச்சியடையும். அதனால் பொருளாதாரமும் இரு மடங்காக வீழ்ச்சியடையும். இந்த மூன்று பிரதான பிரச்சினைகள் தவிர வெளிநாடுகளிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருதல்இ மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் போன்ற வௌ;வேறு பிரச்சினைகளும் உள்ளன.
அதனடிப்படையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இரண்டாவதாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலும் மூன்றாகவதாகவே தேர்தல் உள்ளிட்ட காரணிகளில் கவனம் செலுத்துகின்றன.
இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை எந்த சுகாதார அமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாது அரசியல் ஆலோசனைகளின் பிரகாரமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதலாவது நோயாளி இனங்காணப்பட்ட போதிலும் ஆணைக்குழு முடிவெடுக்கும் வரை தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
சீனாவின் வுஹான் நகர் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் சுகாதாரத்துறையினரே வைரஸ் தொற்று பிரதானமாகப் பேசுகின்றனர். தமது கருத்துக்களை முன்வைப்பதோடு அரசாங்கத்திற்கும் ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் இலங்கையில் தொற்று நோயியல் பிரிவினருக்குக் கூட பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. எனவே தான் விசேட வைத்தியர்கள் சுகாதாரத்துறையினர் தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.
இலங்கைக்கு சமமான எந்த நாடு இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அமெரிக்கா இ இத்தாலி போன்ற எம்மை விட பலம் மிக்க நாடுகள் இன்றிஇ மாலைத்தீவு உள்ளிட்ட சிறிய நாடுகள் கூட இன்னும் இறுக்கமான வலிமுறைகளையே பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. அவை எம்மை விட குறைந்தளவான பாதிப்புக்களுக்கே முகங்கொடுத்துள்ளன. இதனை பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
அத்தோடு இந்த தீர்மானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக் கொண்டுள்ளதா ? அல்லது இலங்கையிலுள்ள சுகாதார அமைப்புக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனவா என்று அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புகின்றோம். தற்போது வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கூட மீண்டும் தொற்று ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அபாயகரமான நிலைமைகளை புறந்தள்ளி ராஜபக்ச ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தலை நடத்துவதிலேயே மும்முரமாக செயற்படுகின்றனர். நாட்டில் தேர்தலும் பாராளுமன்றமும் அத்தியாவசியமானவையாகும். ஆனால் அந்த பாராளுமன்றத்தை நிர்வகிக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் மக்கள் நலனும் பாதுகாப்பும் அவற்றை விட அத்தியாவசியமானவையாகும்.
அரசியலமைப்பின் படி நாட்டை ஆட்சி செய்வது மாத்திரமல்ல. தேர்தலை நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஜனாதிபதியின் பொறுப்பாகும். ஜனாதிபதியின் பொறுப்பு எனும் போது கோத்தாபய ராஜபக்ச நினைத்தால் அதனை நிறைவேற்றுவதும் இல்லையேல் கைவிடுவதும் அல்ல. நாட்டின் ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட அறிவித்தலில் கூட்டங்கள் நடத்த முடியாதுஇ மத உற்சவங்கள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் எவ்வழியிலாவது தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவிக்குமாறு சுயாதீன தேர்தலை ஆணைக்குழுவை அச்சுறுத்தும் பாணியில் கடிதம் அனுப்புகின்றனர். இந்நிலைமையானது நாட்டில் தொடர்ச்சியாகக் காணப்படும் நிறைவேற்றதிகாரத்துக்கும் அரசியலமைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டையும் நிறைவேற்றதிகாரத்துக்கும் நீதித்துறைக்கு இடையிலான முரண்பாட்டையும் காண்பிக்கிறது.
ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வழங்கியிருக்கும் அதே அரசியலமைப்பில் தான் பாராளுமன்றத்திற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நிறைவேற்றதிகாரம் இவற்றை அச்சுறுத்தும் வகையிலேயே செயற்படுகின்றது. கொரோனா ஒழிப்போடு இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஒழிப்பதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டியேற்பட்டுள்ளது என்றார்.