உலகளவில் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது

443 0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.

சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தாலும், மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் அக்கறையால் குணமைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, 5 லட்சத்து 99 ஆயிரத்து 960க்கு மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். மேலும், 23 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.