சிறிலங்காவில் புதிதாக நான்கு பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா மற்றும் ஜேர்மனி நிறுவனங்கள் இரண்டு இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
இதன்படி, புதிய பூச்சி இனங்கள் கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கான மாதிரிகள் கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.