நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது – வைத்தியர் ஹரித அழுத்கே

368 0

நாட்டினை நாசமாக எம்மால் இடமளிக்க முடியாது என சிறிலங்காவின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தோற்றுநோய் குறித்த பரிசோதனைகள் முடிந்த பின்னர் அதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே அடுத்த வாரம் நாட்டில் ஊரடங்கை தளர்க்க முடியுமா அல்லது மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பதை கூற முடியும்.

இப்போது வரையில் கொரோனா தொற்றாலர்களாக இருக்கலாம் என சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் சகலரும் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் நோயாளர்கலா அல்லது ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களா என கண்டறியப்பட்டு, அவ்வாறு அவர்கள் நோயார்கள் என்றால் அவர்கள் இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் இருந்தவர்கள், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய நபர்கள் யார் என்பதை கண்டறிந்து, படிப்படியாக நாட்டினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

நாளாந்தம் செய்யும் பரிசோதனைகளில் தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆகவே பரிசோதனைகளை ஒருபோதும் கைவிட முடியாத நிலைமை உள்ளது.

ஆகவே உடனடியாக நாட்டில் ஊரடங்கு சட்டத்தை நீக்கி மக்களை ஒன்றுகூட இடமளிக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. இதனை நாம் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது