தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1323 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டங்களின் நிலவரம் குறித்து காண்போம்…
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1323-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:-
கோயம்புத்தூர் 157, திருப்பூர்- 80, ஈரோடு- 70, திண்டுக்கல்-66, திருநெல்வேலி-58, செங்கல்பட்டு -50, நாமக்கல் -50, திருச்சி-46, திருவள்ளூர் -46, மதுரை-44, தேனி -43, கரூர் -42, நாகப்பட்டினம் – 40, ராணிப்பேட்டை -39, தஞ்சாவூர் – 35, தூத்துக்குடி-26, விழுப்புரம் – 26, சேலம் – 24, திருவாரூர் – 21, கடலூர் -20, வேலூர் -22, திருப்பத்தூர் – 17, விருதுநகர் -17, கன்னியாகுமரி-16, தென்காசி – 14, திருவண்ணாமலை – 12, சிவகங்கை – 11, ராமநாதபுரம் – 10, நீலகிரி – 9, காஞ்சிபுரம் – 8, கள்ளக்குறிச்சி- 3,
அரியலூர் -2.