இங்கிலாந்தின் அரசாங்க நர்ஸ் மகள் ஜெனிபர் கொரோனாவில் இருந்து குணமடைந்து தாய்க்கு இறுதி சடங்கு நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது உடலை அவருடைய குடும்பத்தினர் சவ பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.
இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ்ஷையர் நகரில் வசித்து வந்தவர், அனுசுயா சந்திரமோகன். இவர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார். அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய, உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்ய வேண்டிய நேரத்தில் மகளும், இங்கிலாந்தின் அரசாங்க நர்சுமான ஜெனிபர் தாயாரைப் போல கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டார்.
தற்போது அவர், கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ராயல் ராப்ஒர்த் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், ஜெனிபர் குணமடைந்து தாய்க்கு இறுதி சடங்கு நடத்துவார் என்ற நம்பிக்கையில் அனுசுயாவின் உடலை அவருடைய குடும்பத்தினர் சவ பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். ‘ஜெனிபர் குணமடைந்து வரும் வரை அனுசுயாவின் உடலை பத்திரமாக வைத்திருக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.