சிறிலங்காவின் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றில் நான்கு அடி நீளம் கொண்ட பெண் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (18) காலை ஏழு மணி அளவில் இனங்காணபட்டதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுத்தை புலியினை இனங்கண்ட பொதுமக்கள் 110 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல் வழங்கபட்டமைக்கு அமைய மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்ட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் குறித்த சிறுத்தை புலியினை பார்வையிட்ட போது குறித்த புலி வலையில் மாட்டி பயத்தில் இந்த 20 அடி உயர மரத்தில் ஏறியுள்ளதாகவும் இதனை பிடிக்க மயக்க ஊசி ஏற்றி மரத்தில் இருந்து கீழ் இறக்கபட வேண்டுமென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்ததோடு குறித்த புலிக்கு ஊசியினை ஏற்ற ரந்தெனிகளை மிருக வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் ஒருவர் வரவழைக்கப்பட உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.