ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 12 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையில் 526 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்காலப் பகுதியில் 174 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தெரவிக்கப்பட்டு 31,157 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 8,066 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சட்டவிரோத மதுபானங்கள் தொடர்பிலான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டார்.