யோசித்தவுக்கு எதிரான கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

605 0

yoshitha-remandedயோசித்த ராஜபக்சவின் நிதிக்குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை பேச்சாளர் அலவி அக்ரம் இதனை தெரிவித்துள்ளார்.
யோசித்த ராஜபக்ச தற்போது நிதிக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவகிறார்.
லேப்டினன்ட் கொமாண்டர் வெலகெதர என்பவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் யோசித்த மாத்திரம் ஏன் வித்தியாசமான முறையில் பார்க்கப்படுகிறார்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அலவி, வெலகெதர உயர்ப்பதவியில் இருந்த நிலையில் பாரிய குற்றங்களை புரிந்துள்ளார்.
எனவே அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
எனினும் அவர் தொடர்பில் படைகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியே இறுதிமுடிவை எடுப்பார் என்றும் கெப்டன் அலவி தெரிவித்துள்ளார்.

Leave a comment