சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்களில் பாரபட்சம்!

327 0

பெருந்தோட்ட பகுதிகளில் வழங்கப்படும் நிவாரணங்கள் கட்சியடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை, நிவாரண பணிகள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்கும் விடயத்தில், உரிய நடைமுறை சாத்தியமான பொறிமுறை ஒன்று இல்லாதிருப்பதை அவதானிக்க முடிவதாக, முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலக்ராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பிரதேசத்தில் உள்ள 12 தோட்டங்களை சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள 300குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஸ்பிரிங்வுட், மாதம்பை மற்றும் இறக்குவானை பிரதேச மக்களுக்கு இவ்வாறு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிவாரணப் பணிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அசெயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் 57 இலட்சம் குடும்பங்கள் இருப்பதாக இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களம் அறிக்கை தெரிவிக்கின்றது. இதில் 52 லட்சம் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது..

நாட்டில் 52 லட்சத்து 64 ஆயிரத்து 861 பேர் நிவாரணம் பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரசியல் லாப நோக்கோடு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ள கருத்தை தாம் நிராகரிப்பதாக மஹிந்தமானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.