கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டிலுள்ள சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்களில் 6 ஆயிரம் வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான வெதுப்பக ஊழியர்கள் தொழில்வாய்ப்புகளை இழந்து விட்டதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறினார்.
அத்துடன் வெதுப்பக தொழிலுக்கு இதுவரை எந்த சலுகையும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், வெதுப்பக தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.