சிறிலங்கா மத்திய வங்கியின் வங்கி வீதம் குறைப்பு

330 0
சிறிலங்கா  மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 ஏப்பிரல் 15 அன்று நடைபெற்றது.

கூட்டத்தில், சிறிலங்கா  மத்திய வங்கியின் முதன்மை கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன 2019 மே 31 இலிருந்து 200 அடிப்படை புள்ளிகளால் ஒட்டுமொத்தமாக குறைக்கப்பட்டமையினை அவதானத்தில் கொண்டு, வங்கி வீதத்தினை 10300 அடிப்படை புள்ளிகள் எல்லையுடன் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் தன்னியக்கமாக சரிசெய்துகொள்ள அனுமதிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.

அதன்படி, 2020 ஏப்பிரல் 16 இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில், அவசர காலங்களில் பயன்டுத்திக்கொள்ளக்கூடிய நிருவாக ரீதியில் தீர்மானிக்கப்படுகின்ற வீதமான வங்கி வீதமானது, 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்திற்கு 500 அடிப்படை புள்ளிகளால் சிறப்பாக குறைக்கப்படுகின்றது.