உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தினால் அதனால் இலங்கையும் பாதிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சுமத்தி எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், உலக சுகாதார அமைப்பு மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை நிதியுதவிகளை அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.