கோவை கோர்ட்டுகளில் 30-ந்தேதி வரை வழக்குகள் எந்தந்த தேதிகளில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் இந்த மாதம் 30-ந்தேதி வரை ஏற்கனவே வாய்தா போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி சக்திவேல் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:-
கோவை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு மற்றும் அனைத்து கூடுதல் செசன்சு கோர்ட்டுகள், முதன்மை சார்பு மற்றும் அனைத்து கூடுதல் சார்பு கோர்ட்டுகள், மாவட்ட முதன்மை முன்சிப் கோர்ட்டு மற்றும் அனைத்து கூடுதல் முன்சிப் கோர்ட்டுகள், பொள்ளாச்சி, சூலூர், மதுக்கரை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள முன்சிப் மற்றும் சார்பு கோர்ட்டுகளில் போடப்பட்டுள்ள வாய்தா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தேதி விவரம்
வழக்கு விசாரணை தேதி தள்ளி வைப்பு அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்.16-ந் தேதி (ஜூலை 6), 17-ந் தேதி-(ஜூலை 7), 20-ந்தேதி (ஜூலை 8), 21-ந் தேதி (ஜூலை 9), 22-ந் தேதி (ஜூலை 10), 23-ந் தேதி (ஜூலை 13), 24-ந் தேதி (ஜூலை 14), 25-ந் தேதி (15-ந்தேதி), 27-ந் தேதி (ஜூலை 16), 28-ந் தேதி (ஜூலை 17), 29-ந் தேதி (ஜூலை 20), 30-ந் தேதி (ஜூலை 21).
கோவை சி.பி.ஐ. கோர்ட்டு, போதைப்பொருள் ஒழிப்பு கோர்ட்டு, பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டு, குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரணை செய்யும் கோர்ட்டு, குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் குடும்ப நல நீதிமன்றம், தொழிலாளர் நல கோர்ட்டு, மகளிர் கோர்ட்டு, போக்சோ சிறப்பு கோர்ட்டு, தலைமை குற்றவியல் கோர்ட்டு, ஊழல் வழக்கு சிறப்பு கோர்ட்டு மற்றும் அனைத்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, முன்சிப் கோர்ட்டு, காசோலை மோசடி விரைவு கோர்ட்டு வாய்தா தேதி விவரம் வருமாறு:-
ஏப்.16-ந் தேதி (ஜூன் 2), 17-ந் தேதி (ஜூன் 3), 20-ந் தேதி (ஜூன் 4), 21-ந் தேதி (ஜூன் 5), 22-ந் தேதி (ஜூன் 6), 23-ந் தேதி (ஜூன் 8), 24-ந் தேதி (ஜூன் 9), 25-ந் தேதி (ஜூன் 10), 27-ந் தேதி (ஜூன் 11) 28-ந் தேதி (ஜூன் 12), 29-ந் தேதி (ஜூன் 15), 30-ந் தேதி (ஜூன் 16).