தி.மு.க., நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டம், அரசியல் லாபம் தேடும் கூட்டம்’ என, த.மா.கா., தலைவர், வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மத்திய, மாநில அரசுகளுக்கு, அனைத்து தரப்பு மக்களும், ஆதரவு குரல் கொடுக்க வேண்டும். ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவு கொடுக்காமல், மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் செயல்படுவது, வருத்தம் அளிக்கிறது.கொரோனாவை ஒழிப்பதிலும், மக்கள் சுமையை குறைப்பதிலும், அரசியல் கட்சியினர், பொது மக்கள் என, ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.
அப்படித் தான் எதிர்க்கட்சிகள் நினைக்க வேண்டுமே தவிர, இதில், அரசியல் சாயம் பூசவோ, தனி நபர் லாபம் தேடவோ கூடாது.தமிழகத்தில், தி.மு.க., ஏற்பாடு செய்துள்ள, ‘வீடியோ கான்பரன்சிங்’ கூட்டம், அரசியல் லாபம் தேடும் கூட்டம். அதை, மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.