5 லட்சம் முக கவசங்கள் தையல் சங்கம் தயாரிப்பு

344 0

தமிழகத்தில், சுகாதாரத் துறைக்காக, ஐந்து லட்சம் முக கவசங்களை தயாரிக்கும் பணியில், சமூக நலத்துறை ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு உதவும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகளிடம், ஐந்து லட்சம் முக கவசங்கள் தயாரித்து தரும் படி கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பெண்களிடம், முக கவசங்கள் தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர்கள், இரண்டு லட்சம் முக கவசங்கள் தயாரித்து வழங்கி உள்ள நிலையில், இன்னும், மூன்று நாட்களுக்குள், ஐந்து லட்சம் முக கவசங்கள் தயாரிக்கும் பணியில், மகளிர் தையல் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, சமூக நலத்துறை கமிஷனர், ஆப்ரஹாம் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா ஒழிப்பு பணியில், தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து, பல்வேறு துறைகள் ஈடுபட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, சமூக நலத்துறை சார்பில், முக கவசம் தயாரித்து வழங்கப்படுகிறது. விரைவில், ஐந்து லட்சம் முக கவசங்கள் வழங்கப்படும். இவற்றை தயாரிக்கும் பணியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் செயல்படும், மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.