பிரிட்டனில் கொரோனா ஊரடங்கால் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இளவரசர் ஹாரி மரியாதை செலுத்தினர். பெற்றோராக தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிய ஹாரி – மேகன் தம்பதியினர், இந்தாண்டு துவக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடியேறினார். இந்நிலையில் பிரிட்டனில் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வெல்சைல்டு என்ற தொண்டு அமைப்பின் புரவலராக இருக்கும் ஹாரி,பெற்றோர்கள் மற்றும் செவிலியர்களுடன் வீடியோ அழைப்பில் உரையாடினார். கடந்த மே மாதம் பிறந்த ஆர்ச்சி மூலம் தந்தையான ஹாரி, பிரிட்டன் ஊரடங்கு குறித்து பெற்றோர்களிடம் கேட்டறிந்தார்.
அமெரிக்காவிலும் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், கலிபோர்னியாவில் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க அதிக நேரம் இருப்பதை ஹாரி குறிப்பிட்டார். வீடியோ கால் மூலம் பெற்றோர்களுடன் ஹாரி பேசியதாவது, இதுநிச்சயமாக விசித்திரமான நேரம். உங்களில் ஒவ்வொருவருக்கும் முழு மரியாதை செலுத்துகிறேன். ஏனென்றால் இது அனைவருக்கும் கடினமானது, நிச்சயமாக கடினமான நாட்கள் இருக்கும். உங்களுக்கு இது எவ்வளவு கடினம் என்பதை என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. 11 மாத வயதில் ஒரு குழந்தையை வைத்திருப்பது கடினமானது என்பதை அறிவேன். எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது ஒவ்வொருவரும் மீது உண்மையாக மரியாதை கூடுகிறது.
ஊரடங்கால் நிகழ்ந்த ஒரே நேர்மறையான விஷயம் என்றால் அது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது தான். நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கும் அளவுக்கு குடும்பம், இவ்வளவு குடும்ப நேரம் இருப்பதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேனா? என வினவிய ஹாரி, மேலும் கடினமான நேரங்கள் வரும் போது நேர்மறையான தருணங்களைப் பாராட்டுவதுமுக்கியம் என்றும் கூறினார்.
நீங்கள் தரையில் இருக்கும் அந்த தருணங்களை கொண்டாட வேண்டும், ஏதோவென்று நிகழ்ந்ததால் வெறித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள், தவிர்க்க முடியாமல், அரை மணி நேரம் கழித்து, ஒரு நாள் கழித்து, நீங்கள் சமாளிக்க வேண்டிய ஒன்று இருக்கப்போகிறது . நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளும் வரை, ஒருவருக்கொருவர்பார்த்துக் கொள்ளும் வரை, அதுதான் நீங்கள் செய்யக்கூடிய சிறந்தது இவ்வாறு அவர் பேசினார்.