கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி ரஷ்யா வெற்றி தின விழா ஒத்தி வைப்பதாக அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதை நினைவுகூரும் வகையில், 75-வது ஆண்டு வெற்றி தினத்தை வரும் மே.9 ம் தேதி கோலாகலமாக கொண்டாட அந்நாடு ஏற்பாடு செய்து வந்தது.
இந்நிலையில் கொரோனாவால் ரஷ்யாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.இந்த சூழ்நிலையில் ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி அதிபர் விளாடிமிர் புடின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வெற்றி தின விழா ஏற்பாடுகளை தாற்கலிகமாக தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டார்.