சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூரல் நிகழ்வுகள் இரத்து!

351 0

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேவாலய நிகழ்வுகளை இரத்துச் செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வாசஸ்தலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்தவகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் நிறைவுபெறுவதை முன்னிட்டு சிறிலங்காவின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நினைகூரல் நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்குச் சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.