யாழ்.மாநாகர சபையை முற்றுகையிட்டு சுகாதார ஊழியர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பிரதேசத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி கடந்த 8 தினங்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்த போதிலும், இதுவரை எவ்வித தீர்வுகளும் கிடைக்காததையடுத்து, இன்று காலை யாழ்.மாநகர சபையின் அனைத்து வாயிற்கதவுகளையும் அடைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் யாழ்.மாநகர சபையின் நடவடிக்கைகள் யாவும் முற்றாக செயலிழந்துள்ளதோடு, யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சில முன்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்குச் சென்ற யாழ்.பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் தொடர்ந்தும் முற்றுகை போராட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க்பபடுகின்றது.
குறித்த போராட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் கிளிநொச்சி பிரதேச சபை ஆகியனவும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது