கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறமோ அதற்கு இணையாக, பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது.
நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறமோ அதற்கு இணையாக, பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே, தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.