சிறிலங்கா தலைநகர் பகுதியில் கிரேன்பாஸ் நாகலகம் பகுதி முடக்கம்

446 0

கிரேன்பாஸ் நாகலகம் பகுதியில், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து,  குறித்த பகுதியை இன்று (16) முதல் முடக்க பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதிக்குப் பிரவேசிக்கும் வீதியும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா  இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய, கொழும்பு-குணசிங்கபுர, வேல்லவீதி, கிரேன்பாஸ் மற்றும் நாகலகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பேர் நேற்று (15) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.