6 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து அதிபர் உடல் தோண்டி எடுப்பு

354 0

201611151048233463_poland-president-body-6-years-digging-after_secvpfவிமான நிலையத்தில் பலியான போலந்து அதிபர் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

போலந்து அதிபராக இருந்தவர் எலக்கர்கஷியன்ஸ்கி. இவர் தனது மனைவி மரியா காக்ஷியன்ஸ்கியுடன் விமானத்தில் பயணம் செய்தார். ரஷியாவில் ஸ்மோலென்ஸ்க் என்ற இடத்தில் விமானம் பறந்த போது விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது.

அதில் எலக்காக்ஷியன்ஸ்கி அவரது மனைவி மரியா மற்றும் அந்த விமானத்தில் பயணம் செய்த 96 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி நடந்தது.

அதை தொடர்ந்து விபத்தில் பலியான அதிபர் எலக், அவரது மனைவி மரியா மற்றும் பயணிகளின் பிரேத பரிசோதனை ரஷியாவில் நடந்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் தட்பவெப்ப நிலை காரணமாகவும், மூடு பனியாலும் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு மறைந்த அதிபர் எலக், அவரது மனைவி மரியா ஆகியோரின் உடல்கள் போலந்தின் கார்கோவில் உள்ள வாவெல் கதீட்ரலில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, அதிபரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாகவும் ஆளும் கன்சர் வேடிஸ் கட்சி குற்றம் சாட்டியது.

அதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் எலக் காக்ஷியான்ஸ்கி அவரது மனைவி மரியா ஆகியோரின் உடல்களை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

எனவே நேற்று இவர்களின் உடல்கள் கல்லறையில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதே போன்று விமான விபத்தில் பலியான 96 பேரின் உடல்களும் தோண்டியெடுக்கப்படுகின்றன.