ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்டு

313 0

201611151051494211_us-teacher-suspended-for-comparing-trump-to-hitler_secvpfஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அமெரிக்காவில் உள்ள ஒரு பிரிவினர் ஏற்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்கள் அவமதிப்பு உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. அதுவே அவர் மீதான எதிர்ப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மவுன்பெய்ன் வியு உயர்நிலைப் பள்ளியில் பிராங்க் நவாரோ என்ற வரலாற்று பாட ஆசிரியர் பாடம் நடத்தினார்.

அப்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டார். ஜெர்மனியை மீண்டும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்வேன் என ஹிட்லர் தெரிவித்தார். அதே போன்று, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பும் அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என உறுதி அளித்துள்ளார் என்று மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இது குறித்து அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் கூறினர். ஹிட்லருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை ஒப்பிடுவதா? என கண்டித்தனர்.இதை தொடர்ந்து வரலாற்று பாட ஆசிரியர் பிராங்க் நவாரோவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு (தற்காலிக பணிநீக்கம்) செய்தது.