வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காக்கு வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம்-அனில் ஜாசிங்க

700 0

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை  சிறிலங்காக்கு அழைத்து வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு இன்னும் ஆயிரம் பேர் வரையில் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்னர் நாட்டு நிலைமை சுமுகமடைய வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிலைமை சுமுகமடைந்தவும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு படிப்படியாக அழைத்து வர முறையான திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.