ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டிக்கோயாவில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத் திட்டம் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, சுமார் 450 குடும்பங்களுக்கு 3500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மா, பால்மா, பருப்பு, ரின்மீன், தேங்காய் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
டிக்கோயா பள்ளிவாசல் சமூகத்தின் நிதி உதவியுடனேயே இந்த நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.